பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு - சேலத்தில் பரபரப்பு

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (11:30 IST)
டெல்லி ஜவகர்ஹால் நேரு பலகலைக்கழக மாணவர் முத்துகிருஷ்னன் சமீபத்தில், அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 


 

 
அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும், அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என அறிக்கை அளித்தனர். ஆனால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என முத்துகிருஷ்ணனின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், அவரின் உடல் நேற்று டெல்லியிலிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அவருக்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வந்தார். ஆனால், அவருக்கு சில மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். 
 
அந்நிலையில், முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது யாரோ செருப்பை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார், அவர் மீது காலணி வீசிய ஒருவரை பிடித்து சென்றனர். 
 
முத்துகிருஷ்ணன்  தற்கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என அவர் பேட்டியளித்தார்.
அடுத்த கட்டுரையில்