இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதி மெரினா கடற்கரையில் குப்பைகள் தேங்கி கிடப்பது தொடர்பான புகைப்படங்கள் தனது செல்போனுக்கு வந்ததாகவும், பொங்கல் பண்டிகையின் போது மெரினா கடற்கரை குப்பையாக காட்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடற்கரையை எப்படி பாதுகாப்பது என மக்களுக்கு தெரியவில்லை என்று வேதனையுடன் கூறிய நீதிபதி, "காணும் பொங்கலுக்கு விடுமுறை அளிப்பதால் தானே இவ்வாறு மக்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்," என்று கடினமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசி செல்பவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அதிகம் கூடிய தினங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பாயம் வலியுறுத்தியது.