அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் செந்தில் பாலாஜி - எம்.எல்.ஏ கூட்டத்தில் நடந்தது என்ன?

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (10:57 IST)
கரூர் தொகுதி எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி தனக்கு அமைச்சர் பதவி வழங்காத அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


 

 
மறைந்த முதல்வரின் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதன்பின் அந்த பதவி அவரிடமிருந்து பறிப்பட்டது.  அந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.   
 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், சசிகலாவின் ஆதரவளாக செயல்பட்டு வருகிறார். அதேபோல், தனக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் அவர் எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடக்கவில்லை. எனவே, அவர் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். எனவே, விரைவில் அவர் ஓ.பி.எஸ் அணிக்கு செல்வார் எனவும் செய்தி வெளியானது. ஆனால், சாகும் வரை சசிகலா அணியில்தான் இருப்பேன் என அவர் விளக்கமளித்தார்.
 
ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டதும், அனைத்து எம்.எல்.ஏக்களும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், செந்தில் பாலாஜி மட்டும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க செல்லவில்லை. அமைச்சர் செங்கோட்டையன் அவரை தனியாக அழைத்து சென்று தினகரனிடம் வாழ்த்து கூற வைத்தார். ஆனால், அவருக்கு கை கொடுக்காமல் தினகரன் புறக்கணித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் உரை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இதுபற்றி விவாதிப்பதற்காக, சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
அதில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி மிகவும் சோகமாகவே காணப்பட்ட அவர் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த சில எம்.ஏல்.ஏக்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.  ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. இன்று நடக்கும் சட்டமன்ற கூட்டத்திலும் அவர் பஞ்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்