அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்த பாமக: காரணம் அரியலூர்?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:53 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


 
 
அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அரியலூர் சென்றனர். ஆனால் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதை பாமக தலைமை தவிர்த்துள்ளது. அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த செல்ல அன்புமணி ராமதாஸ் செல்வார் என அவரது கட்சியினர் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் செல்லவில்லை.
 
அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்த செல்லவேண்டும் என பாமகவை சேர்ந்த சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் பலரும் இணையதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம் அனிதா அரியலூரை சேர்ந்தவர் என்பதும் அவரது இறுதி அஞ்சலி அரியலூரில் நடந்தது என்பதும் தான் என கூறப்படுகிறது.
 
பாமக தலைவர்கள் அரியலூர் என்றாலே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தவிர்கிறார்களாம். அவ்வளவு ரிஸ்க் எடுத்து அரியலூருக்கு செல்ல வேண்டாம் என்பதே அவர்கள் எண்ணம் என கூறப்படுகிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவிற்கும் பாமக தலைவர்கள் செல்லவில்லை.
 
அதே போல பாமக வழக்கறிஞர் பாலுவின் உறவினர் இல்ல திருமண விழாவுக்கு அன்புமணி ராமதாஸை அழைத்திருந்தனர். ஆனால் அரியலூர் மாவட்டம் என்பதால் அவர் அங்கு செல்லவில்லையாம். அரியலூர் மாவட்டமா? அங்கே ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுத்துப் போகணும்? என நினைத்து அனிதாவுக்கும் அஞ்சலி செலுத்தாமல் விட்டுவிட்டனர் பாமகவினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்