நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (07:30 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஆறு முறை ஏற்கனவே பரோல் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 7 வது முறையாகவும் பரோல் நீட்டிப்பு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஏழாவது முறையாக பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பரோல் ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நளினியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை கவனித்துக் கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் முறையாக பரோல் வழங்கப்பட்டது 
 
அதன் பின்னர் தொடர்ச்சியாக ஆறு முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில்  தற்போது 7வது முறையாகவும் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்