மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000... கால அவகாசம் நீட்டிப்பு!

வியாழன், 30 ஜூன் 2022 (15:30 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். தாலிக்கு தங்கம் திட்டத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
 
மேலும், www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு 14417ல் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்