பெற்றோரை சரியாக கவனிக்காத மகள் – சொத்துப் பத்திரம் ரத்து!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:01 IST)
கோவை மாவட்டத்தில் தங்கள் மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துப் பத்திரத்தை பெற்றோர் திரும்பி வாங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடராஜன் மற்றும் துளசி தம்பதிகள். மில்லில் வேலை செய்து வந்த நடராஜனுக்கு மனோரஞ்சிதம் மற்றும் ஜெயலட்சுமி என்ற இரு மகள்கள். அவர்களுக்கு திருமணம் ஆகி தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு இருந்த 11 செண்ட் நிலத்தை மகள்களுக்கு சரிபாதியாக பிரித்துக் கொடுத்துள்ளார்.

அதில் ஒரு பாதியில் மனோரஞ்சிதத்துக்கு கொடுத்த நிலத்திலேயே தற்போது பெற்றோரை வசிக்க சொல்லிவிட்டார் அவர். ஆனால் ஜெயலட்சுமியோ வயது மூப்பால் அவதிப்படும் தன் பெற்றோருக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்துள்ளார். பதிலுக்கு கொடுத்த நிலத்தையாவது திருப்பி தர சொல்லி கேட்டதற்கு அதற்கும் மறுத்துள்ளார்.

இதையடுத்து தம்பதிகள் தங்கள் வழக்கறிஞர் மூலமாக வருவாய் கோட்டாட்சியர் சுரேஷை அணுக அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் தம்பதிகள் சொல்வது உண்மை எனக் கண்டறியப்பட்டது. அதையடுத்து சொத்துப் பத்திரத்தை பதிவை ரத்து செய்து மீண்டும் நடராஜனிடமே ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவமானது பெற்றோர்களை சரியாகக் கவனித்துக் கொள்ளாத வாரிசுகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்