இன்று மகேந்திரன், நாளை பத்மப்ரியாவா? திமுகவுக்கு தாவும் மநீக பிரபலங்கள்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (18:58 IST)
இன்று மகேந்திரன், நாளை பத்மப்ரியாவா? திமுகவுக்கு தாவும் மநீக பிரபலங்கள்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த பத்மபிரியாவும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் திமுகவில் டாக்டர் மகேந்திரன் இருந்தார் என்பதை பார்த்தோம் இதனை அடுத்து பத்மபிரியாவும் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. நாளை அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரபலங்கள் தொடர்ச்சியாக திமுகவில் இணைய எடுத்திருக்கும் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் மகேந்திரன் பத்மபிரியாவை அடுத்து வேறு யார் திமுகவில் என போகிறார்கள் என்பதை பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்