வாரம் ஒருநாள் மதுபானம் இலவசம்....அரசு புதிய திட்டம்

வியாழன், 8 ஜூலை 2021 (17:05 IST)
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியின்போது, தேர்தல் அறிக்கையின்படி இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அதேபோல், பீகார், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளும் மக்களைக் கவரும் வகையில் பல புதிய இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் மதுக்கடைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் மதுபான விற்பனையை அதிகரிக்கும் வகையிலும்  ஒரு புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒருநாள் இலவசமாக மது வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு அதன் பின்னர் குறிப்பிட்ட அளவு இலவசமாக மது வழங்கப்படும் எனவும் இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்