பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! – இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:10 IST)
புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மக்களை அமைச்சர் சந்திக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்குவதாக இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் புழங்கும் குடிநீர் டேங்கில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அங்கு தீண்டாமை கொடுமைகள் நடப்பதாக தெரிய வந்த நிலையில் புதுக்கோட்டை ஆட்சியர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் “தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!!

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்