புதுக்கோட்டையில் தீண்டாமை! போலீஸார் அதிரடி கைது, வழக்குப்பதிவு!

புதன், 28 டிசம்பர் 2022 (09:16 IST)
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் சாமியாடிய பெண் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின் மக்களும் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை அங்குள்ள கோவிலுக்கு செல்ல மற்ற சமூகத்தினர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தனிக்குவளை முறையில் அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

சமீபத்தில் பட்டியலின மக்கள் குடிதண்ணீர் புழங்கும் டேங்கில் மர்ம ஆசாமிகள் மலத்தை கலந்தது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் கோவில் விவகாரத்தில் பட்டியலின மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றார்.

அதை எதிர்த்து கோவில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் சாமி வந்தது போல ஆடி பட்டியலின மக்களை இழிவாக பேசினார். இதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இரட்டைக்குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா, அவரது மனைவி இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டீக்கடை மூக்கையாவையும், பூசாரி மனைவி சிங்கம்மாளையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்