மோடி பின்னால் ஒளியாமல் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்.. ப.சிதம்பரம்

Siva
ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (11:06 IST)
பிரதமர் மோடி பின்னால் ஒளிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமன் போட்டியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தனது மகனுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் இன்று அவர் பிரச்சாரம் செய்யும் போது ’தமிழர்கள் என கூறும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

மேலும் கச்சத்தீவை யாரும் யாருக்கும் தாரை பார்க்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் பிரச்சனையை எழுப்புவது இலங்கை தமிழர்கள் செய்யும் மிகப் பெரிய தீங்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவினர் மன்மோகன் சிங் பத்து ஆண்டுகளாக பிரதமராக இருந்தபோது எந்த தேர்தலை சந்தித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கச்சத்தீவு யாருக்கும் யாரும் தாரை வார்க்கப்படவில்லை என்பது சுத்த பொய் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.


Edited by siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்