தமிழகத்திற்கு வெள்ள நிதியாக கொடுத்த ரூ.5900 கோடியை என்ன செய்தார்கள்? நிர்மலா சீதாராமன்

Mahendran

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (13:22 IST)
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என தமிழக முதல்வர் உள்பட ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.5900 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது என்றும் அதை  என்ன செய்தார்கள் என்று தமிழக அரசு கணக்கு கூற வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னைக்கு 5000 கோடியை சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்கி உள்ளது என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்திற்கு ரூ.900 மோடியை ஒதுக்கினோம் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார் 
 
ரூபாய் 900 கோடி மற்றும் ரூபாய் 5000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை என முதல்வர் கூறி இருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் இந்த கேள்விக்கு என்ன பதில் கூற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்