மக்களவை தேர்தலில் போட்டியிடாதது ஏன்..? ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதில்..!!

Senthil Velan

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:51 IST)
கட்சி தலைமை உத்தரவிட்டால் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் இல்லையென்றால் போட்டியிட முடியாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். மக்களவைத் தேர்தலில்  போட்டியிட பணம் இல்லை என்று நீங்கள் தெரிவித்ததாக அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.
 
யாரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதை கட்சி தலைமை  தீர்மானிக்கும் என்றும் எங்கள் கட்சி எப்போது தீர்மானிக்கிறதோ, அப்போது தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

ALSO READ: ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு..! ஏப்.16 வரை நீட்டித்து உத்தரவு..!
 
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பணம் வருகிறது என திமுக கூறுகிறது என்றும் ஏன், திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் வரவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  திமுகவுக்கு  ஒரே நபரிடம் இருந்து 90 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்