தமிழ்நாட்டில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (11:10 IST)
தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியதை அடுத்து நவம்பர் 20ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்யும் என்றும் அதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது
 
தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்