நவம்பர் 20,21-ல் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? – வானிலை ஆய்வு மையம்!

வியாழன், 17 நவம்பர் 2022 (14:37 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதம் முதலாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 19ம் தேதி வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 20ம் தேதியில் செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்