இன்றும் நாளையும் மிக கனமழை: தமிழகத்திற்கு ஆரெஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (09:39 IST)
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.  
 
ஆந்திர பிரதேச கடற்கரைக்கு அப்பால் குமரி பகுதியில் இருந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் இதன் காரணத்தினால் இன்றும் நாளையும் தமிழக முழுவதும் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழையும் பெய்யும் என்றும்  நவம்பர் 25ஆம் தேதி வரை கேரள கடலோரம், கர்நாடக கடலோரம் மற்றும் தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நவம்பர் 24, 27 ஆகிய தேதிகளில் மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்று முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும் என்றும் சென்னை மட்டுமின்றி 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்