லாவண்யா குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம்: ஓபிஎஸ் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:12 IST)
தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட லாவண்யா குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்