தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அறிக்கை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (21:32 IST)
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து யாருடைய நலனுக்காக முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருந்தி போராடினோமோ, அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும்போது என்னதான் அரசியல் பயணத்தில் இரும்பு மனருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது 
 
2001ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்ததால் அமைதியாக இருக்கின்றேன் 
 
எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை, கழக சொந்தங்கள் உணரும் வரை இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையில் பயணிப்போம் என்று பதிவு செய்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்