கரை வேட்டி இல்லை, கட்சி கொடி இல்லை.. சென்னையில் ஓபிஎஸ் அவசர ஆலோசனை..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (14:12 IST)
அதிமுக கொடி, சின்னம்  மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த இடைக்கால தடை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கரை வேட்டி இன்றி, அதிமுக கொடி இல்லாத காரில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வருகை தந்தார்.


முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில்  இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓ.பி.எஸ். இல்லம் வந்த நிர்வாகிகளின் கார்களில் அதிமுக கொடி கட்டப்படவில்லை என்பதும், கரை வேட்டி இன்றி, கட்சி கொடி இல்லாத காரில் ஓபிஎஸ் உட்பட அனைவரும் வருகை தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆலோசனை செய்வதற்காக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை அழைத்துள்ளார் என தெரிகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்