புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவராக அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கட்சியின் பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டார்.
அதை அவரது மகனான அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே ஆட்சேபித்ததால் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து ராமதாஸ் “நான் எடுக்கும் முடிவில் விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” என பேசியுள்ளார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு எழுந்ததுடன், பாமக தொண்டர்கள் சிலர் அன்புமணி பெயரை முழங்கியபடி ராமதாஸ் காரை மறித்ததால் பரபரப்பு எழுந்தது.
தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் உருவாகியுள்ள இந்த மோதல் போக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K