2026ல் கப்பு எங்களுக்குதான் பிகிலு.. விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் போஸ்டர்..!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:28 IST)
2024, 2026 ஆம் ஆண்டு கப்பு எங்களுக்கு தான் பிகிலு என அதிமுக அலுவலகம் முன்பு விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சமீபத்தில் நடந்த விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் பேசும்போது 2026 குறித்த கேள்விக்கு கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியிருந்தார். இதிலிருந்து 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிப்பேன் என்று அவர் மறைமுகமாக கூறியதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  அதிமுக அலுவலகத்தின் முன்பு 2024, 2026-ல் கப்பு எங்களுக்கு தான் பிகிலு என்று என்ற வாசகங்களோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 
 
அதில் எடப்பாடி பழனிச்சாமி கிரிக்கெட் வீரர் போல கையில் பேட் வைத்திருப்பது போல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்