கே.சி. பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்: ஈபிஎஸ்-க்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

புதன், 8 நவம்பர் 2023 (18:17 IST)
அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமியை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கிய நிலையில்  இது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மற்றும்  ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக என இரண்டாக உடைந்த போது இரண்டிலும் பல்வேறு தலைவர்கள் இணைந்தனர். 
 
அப்போது அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இதனை அடுத்து அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
இதனை எதிர்த்து அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில்  அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து கே சி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 
 
ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோது கட்சியில் இருந்து கே சி பழனிச்சாமி நீக்கப்பட்டு விட்டார் என எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்த நிலையில் அது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்