செஞ்சுரி அடிக்கும் காய்கறி விலை; அரசு நடவடிக்கை தேவை! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (15:28 IST)
தமிழகத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. தற்போது சகஜநிலை திரும்பியுள்ள நிலையிலும் பல காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாகவே விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது,.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் “காய்கறி விலைகள் குறைந்து விட்டதாக அரசு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டாலும், வெளி சந்தைகளில் பல காய்கறிகளின் விலை தற்போதும் ரூ.100க்கு அதிகமாகவே விற்பனையாகி வருகின்றது. கொரோனா ஊரடங்கின்போது கூட காய்கறிகள் இந்த அளவுக்கு விலை உயரவில்லை. காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை விலை உயர்ந்துள்ளது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே முதலமைச்சர் இந்த விலை உயர்வு விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், ரேசன் கடைகள் மூலமாக காய்கறிகளை பாதி விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்