கழகத்தை அழிக்க நினைப்பவர்களின் சதிவலையை அறுப்போம்! – ஓபிஎஸ் ட்வீட்!

ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (12:05 IST)
அதிமுகவை அழிக்க நினைப்பவர்களின் சதிவலையை அறுப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி ஏற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினமான இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் “நம் கழகத்தை அழித்திடலாம் என, "பகல்கனவு காண்போரின் சதிவலையை அறுத்தெறிவோம்" என உறுதி ஏற்கிறோம்” எனக் கூறி நினைவஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்