அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்! – வாக்களித்த ஓபிஎஸ் நம்பிக்கை

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேனி பெரியகுளம் தொகுதியில் தன்னுடைய வாக்கை செலுத்தியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது” என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்