துணை முதல்வராகவும் அமைச்சராகவும் இருந்த போது பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை காலி செய்ய ஓபிஎஸ் கால அவகாசம் கேட்டுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசுக்கு சொந்தமான பங்களாக்களில் அமைச்சர்கள் தங்கள் பதவிக் காலத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்காக அரசு செலவில் கார் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். இந்நிலையில் இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி அதிமுக எதிர்க்கட்சியாகி விட்டதால் அமைச்சரகள் தங்கள் பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது தம்பியின் மறைவு காரணமாக பங்களாவை காலி செய்ய மேலும் அவகாசம் கேட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் தங்கியிருந்த பங்களாவிலேயே தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.