கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 120 வயது பாட்டி

சனி, 22 மே 2021 (08:35 IST)
ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் தூது எனும் ஒரு தொலைதூர கிராமத்தில் 120 வயதாகும் தோலி தேவி எனும் மூதாட்டி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

 
வயது குறைவாக உள்ளவர்களே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சம் நிலவும் சூழ்நிலையில் 120 வயதாகும் தோலி தேவி தடுப்பூசி எடுத்துக்கொண்டது பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
 
பிறருக்கு முன்னுதாரணமாக தோலி தேவி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக, இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலத்தின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, வெள்ளியன்று மூதாட்டியின் வீட்டுக்கு சென்று, அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்