லாக் டவுன் போட்ட அண்டை மாநிலங்கள்: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?

சனி, 22 மே 2021 (08:24 IST)
தமிழகத்தில் அமலில் உள்ள இந்த இரண்டு வார ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரி 35 ஆயிரமாக உள்ளது.
 
இதனால் இந்த இரண்டு வார ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர் குழுவுடன்  இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை செய்கிறார். 
 
முன்னதாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வரும் மே 31 ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்