’ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து’ முழக்கம் என்ன ஆனது: ஓபிஎஸ் கண்டனம்..!

Webdunia
புதன், 17 மே 2023 (17:18 IST)
“ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து” என்று மேடைக்கு மேடை முழங்கி அதன்மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது.
 
’ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து’ முழக்கம் என்ன ஆனது: ஓபிஎஸ் கண்டனம்..!
 
 ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற முழக்கம் என்ன ஆனது என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
ஒரே தேர்வில் நீர் தேர்வு என்று மேடைக்கு மேடை முழங்கி அதன் மூலம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை  ரத்து செய்ய எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு வரும் செய்தியை கேட்டு வேதனை அளிக்கிறது என்றும் மனதில் உறுதி வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மாணவ மாணவியர்கள் திடமான மனதோடு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் பெற்றோர்களுக்கு நிதிச்சுமை ஏற்படுமோ என்ற சங்கடம் தான் மாணவர்களை மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவியர்  மற்றும் பெற்றோரிடம் ஏற்படுத்தவும், நீட் தேர்வினை ரத்து செய்யவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்