இந்த நிலையில், இன்று மதுரையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நச்சு சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்தாலும், தமிழக அரசு அதைத்தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.