நாடாளுமன்ற கூட்டத்தில் அதிமுக மக்களவை தலைவராக கலந்து கொள்வேன்: ஓபி ரவீந்திரநாத் ட்விட்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (13:51 IST)
நாடாளுமன்ற கூட்டத்தில் அதிமுக மக்களவை தலைவராக கலந்து கொள்வேன் என ஓபி ரவீந்திரநாத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி ஓபி ரவீந்திரநாத் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக இருப்பதால், அவரை அதிமுக எம்பி என அழைக்கக்கூடாது என கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் அதிமுக எம் பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அவருக்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளித்துள்ளதை எடுத்து இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நாளை நடைபெறும்  தேசிய ஜனநாயக கூட்டணியை சார்பாக நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்ளப் போகிறேன் என ஓபி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 
 
‌நாளை (20.07.2023) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023)  மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)  சார்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி  (NDA) அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு  சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்