நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவர பிரச்சனை, விலைவாசி விவகாரம், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.