டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ, எம் சி ஏ போன்ற முதுநிலை படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு டான்செட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், 2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று, அதாவது ஜனவரி 24ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பிப்ரவரி 21ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் என்பவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, டான்செட் நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.