ஜேஇஇ , நீட் நுழைவுத் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும்: மத்திய அரசு

Siva

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (16:43 IST)
ஜேஇஇ , நீட்  உள்ளிட்ட தேர்வுகளை கணினி வழியில் நடத்த வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
பொறியியல் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவு தேர்வு ஜேஇஇ , மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் ஆகியவற்றை கணினி முறையில் நடத்த மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
 
மாணவர்களின் நலன் குறித்தும் தேர்வு அழுத்தத்திலிருந்து விடுவித்தல் குறித்தும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை மத்திய அரசு கடைபிடிக்கும் என்றும், இந்த தேர்வுகள் வணிகமயமாக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
பல்கலைக்கழக மானியக்குழு தேர்வுகளை எளிமையாக்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது என்றும், தொழில்நுட்பம் சார்ந்த தேர்வுகளை கணினி முறையில் நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால் அதே நேரத்தில், ஆன்லைன் வழியாக கணினி முறையில் தேர்வுகளை நடத்துவதற்கு சைபர் குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன என்றும், இந்த விவகாரத்தில் கவனமுடன் கையாள வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்