பிரமாண்டமாக தயாராகிறது பனகல் பார்க் மெட்ரோ.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு?

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (07:48 IST)
சென்னை தியாகராய நகரில் உள்ள பனகல் பார்க்கில் பிரம்மாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் தயாராகி வருவதை அடுத்து அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ வழித்தடம் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் ஒன்று கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ ரயில் பாதை பனகல் பார்க் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பிரம்மாண்டமான ரயில் நிலையம் தயாராகி வருகிறது.

சென்னையில் மிக அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருக்கும் பனகல் பார்க்கில், மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கி விட்டால் முற்றிலும் டிராபிக் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்வார்கள் என்றும், இதன் காரணமாக போக்குவரத்து பிரச்சனை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இரண்டாவது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ நிலையம் தயாராகி வருவதாகவும், தரையிலிருந்து 20 மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கு இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த மெட்ரோ ரயில் ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி டிராபிக் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்