ஐஐடி நுழைவுத் தேர்வு: ஜேஇஇ முடிவுகள் வெளியீடு.. எந்த இணையத்தில் பார்க்கலாம்?

Siva

ஞாயிறு, 9 ஜூன் 2024 (16:19 IST)
ஐஐடி நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் 
 
நாடு முழுவதும் மே 26 ஆம் தேதி ஐஐடி நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை 1.80 லட்சம் பேர் எழுதிய நிலையில் மொத்தம் 48,648 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த தேர்வை https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்.ஐ.டி மற்றும்  ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகள் சேருவதற்கு கடந்த சில ஆண்டுகளாக ஜேஇஇ நடத்தப்பட்டு வருகிறது
 
இந்த தேர்வு முதல் நிலை மற்றும் அட்வான்ஸ் என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே முதல் நிலை தேர்வு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அட்வான்ஸ் தேர்வுக்கு முடிவுகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்