ஒருநாள் கைதியாக சிறைக்கு செல்ல ரூ.500: கர்நாடக சிறையில் புதிய திட்டம்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (14:19 IST)
சிறையிலிருந்து வெளியே வருவதற்குத் தான் காசு கொடுக்கும் நிலையை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிறைக்குச் செல்வதற்கு காசு கொடுக்க வேண்டும் என்ற புதிய திட்டம் கர்நாடக மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் இருக்கும் ஹிண்டல்கா என்ற சிறையில் ஒரு நாள் கைதியாக சிறையில் தங்க ரூபாய் 500 வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒரு நாள் கைதியாக உள்ளே செல்பவர்களுக்கு கைதி எண், சீருடை உள்பட நிஜ கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்றே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கைதியாக ஒருநாள் உள்ளே சென்று சிறையில் கைதிகள் அனுபவிக்கும் வேதனையைப் பார்த்து விட்டு வெளியே வருபவர்கள் இனிமேல் சிறைக்கே செல்லக்கூடாது என்றும், தப்பு செய்ய மாட்டார்கள் என்றும் முடிவு செய்வார்கள் என்றும், அந்த எண்ணத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
அந்த வகையில் ரூபாய் 500 கொடுத்து ஒரு நாள் கைதியாக முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்