சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (19:56 IST)
சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்த பத்திரிகை செய்தி ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று அதாவது ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சென்னை சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளி திரு சங்கரன், உதவி பொறியாளர், சென்னை மாநகராட்சி என்பவருக்கு லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் லஞ்சத்தை பெற்றதற்கு இரண்டு வருடங்கள் கடுங்காவல் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது 
 
மேலும் இரண்டு குற்றத்திற்கும் தலா ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. திரு சங்கர் என்பவரிடம் கட்டிட கட்டுமானத்தை அனுமதிப்பதாக ரூபாய் 2000 லஞ்சமாக கேட்டுப் பெற்ற போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்