ஓணம் லாட்டரி குலுக்கல்: தமிழருக்கு ரூ.25 கோடி பரிசு!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (19:01 IST)
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, அரசே லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் நிலையில், பலரும் இந்த லாட்டர் சீட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள அரசின் ஓணம் லாட்டரி குலுக்கலில் கோவை அன்னூரைச் சேர்ந்த கோகுல் நடராஜ் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசு  கிடைத்துள்ளளது.

இவர், ரூ.5ஆயிரம் கொடுத்து 10 லாட்டரிகள் வாங்கிய  நிலையில் முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. வரிபிடித்தம்போக இவருக்கு ரூ.17 கோடி கிடைகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்