ஓணம் பண்டிகையையொட்டி ரூ.665 கோடிக்கு மது விற்பனை! கேரளாவில் சாதனை..!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:35 IST)
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி ரூபாய் 665 கோடிக்கு மது விற்பனை செய்து சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
கேரளாவில் ஓணம் பண்டிகை கடந்த 9 நாட்கள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஒன்பது நாட்களில்  ரூபாய் 665 கோடிக்கு மது விற்பனை செய்து உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
 கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை மூலம் அரசுக்கு 41 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. 
குறிப்பாக திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடா என்ற பகுதியில் மட்டும் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒன்பது நாளில் ரூ.665 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது அம்மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்