இனி இ-சேவை மையங்களிலும் பணம் எடுக்கலாம்! – தகவல் தொழில்நுட்ப துறை ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (09:48 IST)
ஏடிஎம் மையங்களில் பணம் பெறுவது போல இனி அரசு பொது இ-சேவை மையங்கள் மூலமாகவும் பணம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அரசு அலுவலக பகுதிகளிலும் தமிழக அரசின் அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலமாக அரசு சார்ந்த பல சான்றிதழ்கள், சரிபார்ப்புகளை மக்கள் மேற்கொள்கின்றனர். ஒரு Mini Hub ஆக செயல்படும் இந்த இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கி ஏடிஎம்கள் தவிர பொதுத்துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை ஏடிஎம் மற்றும் பணம் பெறும் கார்டு வசதிகளை பெற்றுள்ளது. அதுபோல இ-சேவை மையத்தையும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சேவையை செயல்படுத்த இ-சேவை மையங்களை டிஜிபே வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்