சென்னையில் மழை வெளுத்து வாங்கும் - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (11:02 IST)
நேற்று இரவு பெய்தது போல் இன்று மாலையும் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 
 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமம்பட்டனர். 
 
இந்நிலையில், நேற்று போல் இன்றும் மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை நீடிக்கும் எனவும்,பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் எனவும் அந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்