சென்னை கனமழை எதிரொலி: மாநில கல்லூரி, சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

வெள்ளி, 3 நவம்பர் 2017 (07:26 IST)
சென்னையில் நேற்று மாலை ஆறு மணி முதல் விடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்



 


இந்த நிலையில் சென்னை மாநில கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் முதல்வர் பிரம்மானந்த பெருமாள் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் கீழ் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திக்கபப்ட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் பாலாஜி அறித்துள்ளார்

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்