தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டண உயர்வுக்கு பாஜக மற்றும் அதிமுக தவிர வேற எந்த கட்சியும் வாயை திறக்காமல் மௌனமாக இருப்பது பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோது திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக இன்றைய முதல்வர் முக ஸ்டாலின் வீதியில் கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த நிலையில் திமுக அரசு தற்போது மின் கட்டண உயர்வு அறிவித்துள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளும் அதன் தலைவர்களும் வாயை மூடி மௌனமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை அளித்துள்ளது