கோவையில் கொரோனா 3வது அலையா? பொதுமக்கள் அச்சம்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (09:28 IST)
கோவையில் 13 வயது சிறுவன் கொரோனாவால் பலியானதை அடுத்து மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் 13 வயது சிறுவன் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததை அடுத்து மூன்றாவது அலை பரவி விட்டது என்ற வதந்தி பரவி வருகிறது 
 
மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோவையில் சிறுவனின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
 
கோவையில் இறந்த சிறுவனின் மருத்துவ அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மூன்றாவது அலை பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும் கோவையில் கூறும் மூன்றாவது அலை இல்லை என்றும் அதனால் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்