ஓடிடியில் வெளியாகும் சிம்புதேவனின் மற்றொரு படம்!

வியாழன், 3 ஜூன் 2021 (08:52 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற எனும் படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டும் தயாரித்த திரைப்படம் கசடதபற. இந்த படத்தின் 6 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபி. சோனி லைவ் தளத்தில் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்