வெளிமாநிலத் தொழிலாளர்கள் மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் ஸ்தபித்துள்ளது. இந்தியாவில், ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாடகை கேட்டு காலி செய்ய கட்டாயப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொழிலாளர்கள் அனைவருக்கும் நிறுவனங்கள் பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.