ஊரடங்கு உத்தரவு... கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவல்துறை...

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (15:30 IST)
கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் ஸ்தபித்துள்ளது. இந்தியாவில், ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், டெல்லியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணைம், காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்று பிரவத்திற்கு உதவிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள மெய்டன் கார்கி  நகரில் அஞ்சணி என்ற பெண்னுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனால், ஆம்புலன் சேவையை பெற முயன்றுள்ளனர்.

ஆனால் முழு ஊரடங்கு உத்தரவு உள்ளதால் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால்,  காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதைக்கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற  போலீஸார், தங்களது வாகனத்திலேயே கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அப்பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்