நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது
இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது